பண்ருட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பண்ருட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் 400க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சுத்திகரிப்பு செய்யபட்ட குடிநீர் வழங்க, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் பண்ருட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா நேற்று முன்தினம்  நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் அர்ஜுனன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளியம்மாள் வெங்கடேசன் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் கோபால், அனிதா, அமல்ராஜ், செல்வி சேகர், ஆசீர்வாதம் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சுலாப் ஜல் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில்  மாவட்ட கவுன்சிலர் குண்ணம் ராமமூர்த்தி,  திமுக பிரமுகர் பண்ருட்டி தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: