ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை

சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு அடிவாரத்திலிருந்து 18வது கிலோ மீட்டரில், சுமார் 20 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று மலைப்பாதையில் சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் போக்குவரத்தில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலை துறையினர் வந்து 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள பள்ளத்தில் ராட்சத பாறை தள்ளி விடப்பட்டது. ஏற்காட்டில் கோடை விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒருநாள் முன்கூட்டியே வரும் 25ம் தேதி தொடங்குகிறது. எனவே, கோடை விழாவிற்காக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், எச்சரிக்கையுடன் மலைப்பாதைகளில் பயணிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: