அணைக்கட்டு அருகே பழுதான டிரான்ஸ்பார்மரை சீரமைத்து சீரான மின்சாரம் சப்ளை செய்ய வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே பழுதரைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் அடுத்த அருணகிரியூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகள் அதிகமாகனதால் போதுமான மின் சப்ளை கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால், மேலும் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.  

அதன்படி அணைக்கட்டு- வரதலம்பட்டு செல்லும் சாலையில் செட்டிமேடு குளக்கரை அருகே மின்வாரியத்தினர் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து அருணகிரியூர் பகுதியில் மின்விநியோகம் செய்தனர்.  இந்நிலையில், கடந்த ஒராண்டுக்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து பழுதானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அங்கிருந்த டிராஸ்பார்மரை சீரமைக்க கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியினருக்கு பழைய டிராஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டது. எனினும், அவர்களுக்கு மின்சப்ளை சீராக கிடைக்காததால், அப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அப்பகுதியினர் பல முறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வீடுகள், விவசாய மின்மோட்டார்கள் இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே அருணகிரியூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து சீரான மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: