நூல் விலை உயர்வை கண்டித்து 2ம் நாளாக ஜவுளி நிறுவனங்கள் ஸ்டிரைக்

ஈரோடு: பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும், பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும், நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தி,  விற்பனை மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்கூடங்கள் நேற்றுமுன்தினம் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கின. இதையொட்டி, நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு,  திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இரண்டாவது நாளாக நேற்றும் ஸ்டிரைக் நீடித்தது. ஈரோடு  மாவட்டம் முழுவதும் 25 சங்கங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஜவுளி மற்றும் சார்பு நிறுவனங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டன. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நேற்றும் அடைக்கப்பட்டிருந்தது. கரூரில் 900 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

Related Stories: