ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு

வாலாஜாபாத்: திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் செய்து வருகிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  எம்பி செல்வம் முன்னிலை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு இலவச பஸ் பயணம், மாணவ, மாணவிகளுக்கு கல்வி சலுகைகள் என பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து மக்களுக்கு என்னென்ன சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் என்றார். நிகழ்ச்சியில், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர்கள் தேவேந்திரன், ஆர்.டி.அரசு, ஒன்றிய செயலாளர்கள் சேகர், ஞானசேகரன், குமார், குமணன், பி.எம்.குமார், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி, துணை தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: