சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம்: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூன் மாதம் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா அமைக்கப்படும். 2 நாள் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினம் - சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத் திட்டமும் தொடங்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டார்.

Related Stories: