திருமலை பொறியியல் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் முனைவர் அரங்கநாதன், தலைவர் முனைவர் சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் முனைவர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு அப்துல் அக்கீம் பொறியல் கல்லூரி இயந்திரவியல் பேராசிரியர் குமார் கலந்து கொண்டு இயந்திரவியல் துறையின் தோற்றம், வளர்ச்சி, துறை வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.

Related Stories: