மாநிலங்களவை தேர்தல் திமுகவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்? பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுகவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 3 பேரின் ெபயர் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு மீண்டும் மாநிலங்கவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அவர் மாநிலங்களை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அவர் மாநிலங்களவையில் பணியாற்றினாலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அவரின் மாநிலங்களவை நடவடிக்கை அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்டம் குறித்து மாநிலங்களவையில் அவர் பேசினார். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ரூ.180 கோடியை உடனடியாக ஒதுக்கினார். அதே போன்று, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் நிலைக்குழு கூட்டத்தில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை ரூ.223.30 கோடி முதல் காலண்டுக்குள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிலக்கரி ஒப்பந்தபடி விரைவில் வழங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வலியுறுத்தினார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம், மூலிகை பண்ணை அமைக்க வலியுறுத்தினார். ஒன்றிய ஆயுஸ் அமைச்சர் ஆய்வு செய்வதாக அறிவித்தார். தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மித்ரா டெக்ஸ்டைல் பார்க் ஒன்றிய ஜவுளித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழகத்தில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் 7 மிகப்பெரிய ஜவுளிப் பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கினர்.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு நலன் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், நாமக்கல்லில் ஆவின் பால் பண்ணை, ராசிபுரம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவது, ராசிபுரம் நாரைக்கிணறு பகுதியில் 1500 விவசாயிகளுக்கு பட்ட வழங்குவது, போதமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி ஏற்பட உச்சநீதிமன்றத்தின் பசுமை தீர்ப்பாயம் மூலம் 34 கிமீ தொலைவிற்கு சாலை வசதி ஏற்பட அனுமதி பெற்ற தந்தார். அவர் சிறப்பாக ெசயல்பட்டதால் மீண்டும் ராஜேஸ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ராஜேஸ்குமார் 1996 முதல் திமுக உறுப்பினர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் கோரைக்காடு கிளை செயலாளர் ஒன்றிய துணைச் செயலாளர் ஒன்றிய பிரதிநிதி மற்றும் மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியவர். 1996 (ஜனவரி 26, 27, 28) திருச்சியில் திமுக 8 மாநில மாநாடு முதல் நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் பெருந்திரளான திமுகவினரை அழைத்து சென்று மாநாடுகளில் பங்கேற்க செய்தவர்.

2001-ல் கலைஞரை கைது செய்த போது சாலை மறியல் செய்து கைதியாக சேலம் மத்திய சிறை சென்றவர். 2001 ஆம் ஆண்டு (27.06.2001) மு.க.ஸ்டாலின் மேம்பாலம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட போதும் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் சென்றவர்.

2001 முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பணிக்குழு மற்றும் வாக்குபதிவு முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவராகவும் பணியாற்றியவர். 2003-ல் ஜெயலலிதா அரசால் ராணி மேரி கல்லூரி போராட்டத்தில் மு.க.ஸ்டாலினை கைது செய்த போது சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2003-2011ல் வெண்ணந்தூர் ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தவர். 2004 மார்ச் மாதம் கலைஞரை சட்டசபையில் அவதூறாக பேசிய அதிமுக அமைச்சர் பொன்னையன் ராசிபுரம் வருகை தந்தபோது கருப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2012ல் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக சிறப்பாக பணியாற்றினார். 2012ல் நாமக்கல் மாவட்டத்தில் 3000க்கு மேற்பட்ட இளைஞர்களை பங்குபெறச் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாசறை கூட்டம் நடத்திக் காட்டியவர். 2016ல் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான அண்ணாவின் 108-வது பிறந்தநாள் விழாவினை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தினார். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் 25க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும் முன்னின்று மாவட்டம் முழுவதும் நடத்திக் காட்டியவர்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை இளைஞர் அணியில் உறுப்பினராக இணைத்தவர். 2018ல் திமுகவின் சிறந்த இளைஞருக்கான விருதை பெற்றார். 2019ல் தமிழக ஆளுநர் நாமக்கல் வருகை தந்த போது அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2019ல் திமுக அமைப்பின் 15வது பொதுத் தேர்தலுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்வினை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தலைமை கழக பிரதிநிதியாக கலந்துகொண்டார். 2020ல் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: