மானாமதுரை அருகே வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்றுப் பகுதியில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டு லாரிகள் சென்று மணல் எடுத்து வர வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணியில் ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பணிகளின்போதே, வைகை ஆற்றுக்குள் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கல்குறிச்சி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டு வந்து வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி அமைக்க பாதை ஏற்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் இவர்கள் இப்பணியில் ஈடுபட்ட ஜேசிபி, பொக்லைன் மற்றும் டிப்பர் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க விடமாட்டோம் என கிராம மக்களும் விவசாயிகளும் கோஷமிட்டனர். இதையடுத்து பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Related Stories: