மதுரை மாவட்டத்தில் மாஸ் கிளினீங்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் 5 மண்டலங்கள் உள்ளன. இதில், மண்டல வாரியாக மாஸ் கிளீனிங் எனப்படும் சிறப்பு தூய்மை பணி நடந்து வருகிறது. இதன்படி மத்திய மண்டலம் 57 வது வார்டு ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மந்தை திடல் பகுதியில் நேற்று காலை மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடந்தது.மேயர் இந்திராணி தூய்மை பணியை துவக்கி வைத்தார். இதில் மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, பிஆர்ஓ மகேஷ்வரன், திமுக நிர்வாகி வைகை பரமன் பங்கேற்றனர்.

*திருப்பரங்குன்றம் 98வது வார்டு பகுதியில் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடந்த தூய்மை பணியை மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் துவக்கி வைத்தார். இதில் சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் கோபால், பால்பாண்டி, ஜான் பீட்டர், மனோகரன் பங்கேற்றனர்.

*வாடிப்பட்டி குலசேகரன்கோட்டையில் பேரூராட்சி செயல்அலுவலர் சண்முகம் தலைமையில், துணை தலைவர் கார்த்திக், கவுன்சிலர் நல்லம்மாள் முன்னிலையில் தலைவர் பால்பாண்டியன் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.

*மேலூர் அ.வல்லாளபட்டியில் நடந்த தூய்மை பணிக்கு பேரூராட்சி தலைவர் குமரன் தலைமை வகிக்க, துணை தலைவர் கலைவாணன், செயல்அலுவலர் நீலமேகம் கலந்து கொண்டனர்.

*அலங்காநல்லூரில் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி தலைமையில், துணை தலைவர் சாமிநாதன் முன்னிலையில், செயல்அலுவலர் ஜீலான் மேற்பார்வையில் தூய்மை பணி நடந்தது. இதேபோல் பாலமேடு பேரூராட்சியில் நடந்த தூய்மை பணியில் தலைவர் சுமதி, துணை தலைவர் ராமராஜ், செயல்அலுவலர் தேவி பங்கேற்றனர்.

*சோழவந்தான் நடந்த தூய்மை பணிக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகிக்க, துணை தலைவர் லதா கண்ணன், செயல்அலுவலர் சுதர்சன் முன்னிலை வகிக்க, துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார். இந்த மாஸ் கிளினீங்கில் தூய்மை பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் குப்பைகளை முழுமையாக அகற்றியதுடன், வீடுகளுக்கும் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்தனர். மேலும் தேங்கி உள்ள தண்ணீரில் கொசுக்கள் வளாரமல் தடுப்பது, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: