துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அதிபராக இருந்தவர் ஷேக் கலிபா பின் சயீத் அல் நஹ்யான் (73). இவர் 2004ம் ஆண்டு அமீரகத்தின் இரண்டாவது அதிபராக பொறுப்பேற்றார். மிகப் பெரிய பணக்காரரான இவரது தந்தை இவருக்கு முன்பாக முதல் அதிபராக பொறுப்பு வகித்தார். 2014ம் ஆண்டு ஷேக் கலிபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இவர் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். உடல்நலக்குறைவால், கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே அலுவல்களை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்தார்.