உலக பொருளாதார மாநாட்டில் தெற்காசியாவில் இருந்து தமிழகம் மட்டுமே பங்கேற்பு: உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்து செல்கிறது

சென்னை: உலக பொருளாதார மாநாட்டில் தெற்காசியாவில் இருந்து தமிழகத்திற்கு மட்டுமே பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக உயர்மட்ட குழு ஒன்று சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டவோஸ்கரில் உலக பொருளாதார மாநாடு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் இந்த மாநாட்டை உலக பொருளாதார அமைப்பு நடத்தி வருகிறது. அந்தவகையில் 4வது தொழில் புரட்சியை மையப்படுத்தி இந்த மாநாடு நடக்க இருக்கிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், டென்மார்க் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கு அரங்குகள் அமைக்கின்றன. தெற்காசியாவில் இருந்து தமிழகம் மட்டுமே தேர்வாகி இருக்கிறது. அதன்படி, தமிழக அரசின் சார்பில் அங்கு சிறப்பு அரங்கம் அமைப்பட உள்ளது.

இந்த பொருளாதார மாநாட்டில் தமிழகத்தில் இருந்து உயர்மட்ட குழு ஒன்று கலந்துகொள்ள உள்ளது. இதற்காக அந்த குழு சுவிட்சர்லாந்து செல்ல உள்ளது. இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. அப்படி முதல்வர் செல்லவில்லை என்றால் அந்த குழுவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி செல்வார் என கூறப்படுகிறது. தற்போது நான்காவது தொழில் புரட்சி மாற்றத்தக்க எரிசக்தியை அடிப்படையாக கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மாற்றத்தக்க எரிசக்தியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் தமிழகத்திற்கு மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைப்பயன்படுத்தி அதிக தொழில் முதலீடுகளை பெறுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.   

Related Stories: