கன்னிவாடியில் முட்புதரான மயானம்: முடங்கி கிடக்கும் மோட்டார்: பொதுமக்கள் அவதி

சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சியின் பொது மயானம் செம்பட்டி சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே உள்ளது. இம்மயானம் போதிய பராமரிப்பின்றி சீமைகருவேல முள்மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. தவிர மயானம் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களும் உள்ளது. மேலும் மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் கை, கால்களை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மயானத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை மின்மோட்டார் காட்சிப்பொருளாய் உள்ளது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருபவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மயானத்தில் மின்மோட்டாரை சீரமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதுடன், புதர்மண்டி கிடக்கும் முட்செடிகளை அகற்ற வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: