ஊட்டியில் தவிட்டுப் பழம், பிக்கி பழ சீசன் துவங்கியது-நடைபாதை கடைகளில் விற்பனை

ஊட்டி : மலை மாவட்டமான ஊட்டியில் சில பழ வகைகள் விளைகின்றன. இவைகளில் காடுகளில் விளையும் பழங்களான தவிட்டு பழம், பிக்கி பழம், ஊசிப் பழம், குரங்கு பழம், நாவல் பழம் போன்றவைகள் ஆண்டு தோறும் அந்தந்த சீசன்களின் கிடைக்கும். இவை பெரும்பாலும் விற்பனைக்கு கடைகளுக்கு வராது. சில பெண்கள் இவைகளை காடுகளில் இருந்து பறித்து வந்து வீடு வீடாக விற்பனை செய்து வந்தனர்.

ஆனால், வனத்துறையினரின் கெடுபிடியாலும், விலங்குளின் தொல்லை அதிகரித்துள்ளதாலும், அவர்கள் காடுகளுக்கு சென்று இந்த பழங்களை பறித்து வந்து விற்பனை செய்வதை தவிர்த்து விட்டனர். ஒரு சிலர் மட்டுமே இவைகளை பறித்து வந்து விற்பனை செய்கின்றனர். தற்போது நீலகிரியில் தவிட்டுப் பழம் மற்றும் பிக்கப்பழ சீசன் துவங்கியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மழைக் காடுகளில் இந்த பழங்களை காண முடிகிறது.

இந்த பழங்களை பெரும்பாலும் உள்ளூர் மக்கள் விரும்பி உண்பது வழக்கம். தற்போது ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளில் கிடைக்கும் இந்த பழங்களை பறித்து வந்து சிலர் சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் விற்பனை செய்கின்றனர். இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் சுவைத்து வருகின்றனர்.

Related Stories: