ஓசூர் பஸ் நிலையத்தில் சோதனை தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் அகற்றம்-ஆர்டிஓ நடவடிக்கை

ஓசூர் : ஓசூர் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் விதி மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரன்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் ஓசூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 52க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டது. மேலும், இது போன்ற ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: