கியூபாவில் ஹோட்டலில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல் வெந்து மரணம்.. 64 பேர் படுகாயம்; 50 பேர் கவலைக்கிடம்!!

ஹவானா : கியூபா தலைநகர் ஹவானாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழம்பெரும் ஹோட்டலில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 22 பேர் மரணம் அடைந்த சம்பவம் அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சரடோகா என்ற இந்த ஹோட்டல் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஹோட்டல் ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற ஆடம்பரமான இந்த ஹோட்டலில் நேற்று திடீரென எரிவாயு கசிந்தது. ஹோட்டலின் சில பகுதிகளில் முழுவதுமாக எரிவாயுவால் நிறைந்த அடுத்த கனமே பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஹோட்டலில் இருந்தவர்கள், ஹோட்டலுக்கு வெளியே நடந்து சென்று கொண்டு இருந்தவர்கள் என மொத்தம் 22 பேர் மரணம் அடைந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஹோட்டலின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. மரணம் அடைந்தவர்களின் கற்பிணியும் ஒரு குழந்தையும் அடங்குவர். இந்த தீ விபத்தில் 64 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹோட்டல்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துகள், கார்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் வெடிகுண்டு தாக்குதல் அல்ல என்று ஹவானா போலீசார் கூறியுள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தான் என்பது உறுதியாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Related Stories: