நாடு முழுவதும் முதல் கட்டமாக 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள்: ஜூலை முதல் செயல்படும்

புதுடெல்லி: வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கி கிளைகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் உரையில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும்,’ என்று அறிவித்தார். வங்கியில் ஒரு சேவையை பெறும்போது அதற்கான ரசீது, காசோலை, வரைவோலை போன்ற ஆவணங்களின் பரிமாற்றம் இருக்கும். ஆனால், டிஜிட்டல் வங்கி சேவை மையத்தில் எந்தவொரு ஆவணமுமின்றி முழுக்க முழுக்க எல்லாம் டிஜிட்டல் முறையில் நடக்கும்.இந்நிலையில், டிஜிட்டல் வங்கி சேவை மையங்கள் தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகளை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு டிஜிட்டல் வங்கி சேவை மையமும் ஒரு வங்கி  கிளையாக கருதப்படும். வரும் ஜூலை முதல் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இவை செயல்பட தொடங்கும். அனைத்து பொதுத்துறை வங்கிகள், 10 தனியார் வங்கிகள் இவற்றை ஜூலைக்குள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: