சின்னாளபட்டியில் பணிகள் பூர்த்தி அடைந்தும் திறக்கப்படாத பூங்காக்கள்: சிறுவர்கள் புகுந்து அட்டகாசம்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்ரீதேவி நகர், பொன்னன்நகர். ஏடிஎஸ் நகரில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. கடந்த வருடம் ஜூலை (2021) மாதம் பூங்காக்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, இவ்வருடம் (2022) ஜனவரி மாதம் பூர்த்தி அடைந்துவிட்டன. பூங்காவின் உள்ளே குடிதண்ணீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகள், திருகு குழாயுடன் அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் பூட்டிக்கிடக்கும் பூங்காவிற்குள் சென்று விளையாடி வருவதால் பூங்காவில் உள்ளே அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள், சருக்கு பாதையுடன் கூடிய உபகரணங்கள், தண்ணீர் தொட்டிகள் உடையும்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சின்டெக்ஸ் தொட்டி மீது ஏறி விளையாடும் சிறுவர்கள் தடுமாறு கீழே விழுந்தால் கை, கால்கள் முறிந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பள்ளி சிறுவர்கள் நலன் கருதி பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: