தேன்கனிக்கோட்டை அருகே குதிரை பண்ணைக்கு மீண்டும் வந்த சிறுத்தை: சிசிடிவியில் சிக்கியது

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே குதிரையை அடித்து கொன்ற சிறுத்தை மீண்டும் குதிரை பண்ணைக்கு வந்து சென்றதை, சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பேளாளம்-நெல்லுமார் சாலையில் பெங்களூருவைச் சேர்ந்த அல்லிஉல்லாகான் (50) என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது. இந்த பண்ணையில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி அதிகாலை, பண்ணைக்குள் நுழைந்த மர்மவிலங்கு, 7 வயது பெண் குதிரையின் மீது பாய்ந்து கழுத்தை கடித்து குதறி, அதனை கொன்று உடலை சாப்பிட்டு சென்றது. காலையில் வழக்கம்போல பண்ணைக்கு வந்த பணியாளர்கள் பெண் குதிரை உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த தளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குதிரையை தாக்கி கொன்றது சிறுத்தை என தெரியவந்தது. இதனால் உயிரிழந்த குதிரையின் உடலை அங்கிருந்து எடுக்காமல், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர். இந்நிலையில், மீண்டும் அங்கு வந்த சிறுத்தை குதிரை, பண்ணைக்குள் புகுந்து அங்கு உயிரிழந்து கிடந்த குதிரையின் உடலை சாப்பிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: