உலகமே எதிர்பார்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 170 நாடுகள் பதிவு: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

ஆலங்குடி: மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்-2022 சர்வதேச செஸ் போட்டியை உலகமே எதிர்பார்க்கிறது. இதில் 170 நாடுகள் பதிவு செய்துள்ளன என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டையில் நேற்று அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி: மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்-2022 சர்வதேச செஸ் போட்டியை உலகமே எதிர்பார்க்கிறது. இதில் 170 நாடுகள் பதிவு செய்துள்ளன. இன்னும் பல்வேறு நாடுகள் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாபலிபுரத்தில் இருக்கும் தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அகில இந்திய செஸ் கூட்டமைப்பும், செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பும் இணைந்து செய்து வருகிறது. இதை விளையாட்டு துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து பிரக்யானந்தா, அவரது சகோதரி வைஷாலி பங்கேற்க உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த், பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர். பல்வேறு செஸ் விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர். இந்தியாவில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் அணிகள் பங்கேற்கிறது.

Related Stories: