ரூ.34.5 லட்சத்தில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த சின்னநாகபூண்டியில் பாழடைந்த கட்டிடத்தில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்தது. உடைந்து விழும் அபாய நிலையில் இருந்த கட்டிடத்தில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து வந்தனர்‌. இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட ஏதுவாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமை வகித்தார்.

இதில், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்துகொண்டு கால்நடை மருந்தகம் கட்டிடம் கட்ட அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மா.ரகு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் திலகவதி ரமேஷ், திமுக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் நதியா திருஞானம், பிரமிளா வெங்கடேசன், சிவகுமார், செல்வி சந்தோஷ், திருநாவுக்கரசு, திமுக நிர்வாகிகள் வெங்கடாஜலம், சீராளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: