கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊட்டி சாலையில் 26வது மைல் பகுதியில் உள்ள ஊசிமலை சுற்றுலா தலத்தில் நேற்று முன்தினம் மே தினம் மற்றும் வார விடுமுறை காரணமாக ஏராளமான கேரள சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஊசிமலை காட்சி முனையில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு காட்சிகள், முதுமலை வனப்பகுதிகள், தவளைமலை உள்ளிட்ட மலைத்தொடர்களை கண்டு ரசிக்க முடியும். கோடைமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் பசுமையாக உள்ள வனப்பகுதிகள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.