அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!

சென்னை : காவல் மற்றும் தீயணைப்பு அவசர உதவி எண் “100” செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அசாதாரணமாக ஏற்படும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பதற்காகத்தான் அரசு பல அவசர உதவி எண்களை வைத்திருக்கிறது. ஒரு பிரச்னையை தீர்ப்பதற்காக அந்த அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு அதுவே தலைவலியாக மாறினால் எப்படி இருக்கும்? தமிழகத்தில் அவசர உதவி எண் 100ஐ அழைத்தால் அருகாமை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்றுவிடும். அங்கு இருக்கும் அதிகாரிகள் நமக்கு தேவையான அவசர தேவையை பூர்த்தி செய்வதற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பர்.

ஆனால் தற்போது காவல், தீயணைப்பு அவரச எண் “100”ஐ அழைத்தால் கணினி குரல் காத்திருக்க கூறுகிறது பதில் ஏதும் இல்ளல. மாறாக காவல், தீயணைப்பு அவரச எண் “100”ஐ டயல் செய்தால் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது என கணினி குரல் கூறுகிறது.உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்று அந்த கணினி குரல் தொடர்ச்சியாக கூறுகிறது. இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் காவல், தீயணைப்பு அவரச எண் “100”ஐ டயல் செய்து அவசர உதவி கோர முடியாத காரணத்தினால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.கடந்த ஒரு வாரமாக இதே நிலை தான் நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே காவல், தீயணைப்பு அவசர உதவி எண் “100”ஐ உடனடியாக சரி செய்து அழைப்பை ஏற்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: