தனிஷ்க் ஷோரூம்களில் அட்சய திருதியை முன்னிட்டு புதிய வளையல்கள் தொகுப்பு

சென்னை: டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமில், அட்சய திருதியை கொண்டாடும் வகையில், தனிஷ்க் ‘கலை’ என்னும் புதிய வளையல் தொகுப்பை கவர்ச்சிகரமான சலுகைகளுடன் அறிமுகப்படுத்துகிறது. அட்சய திருதியைக்கு வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகள் எதுவாக  இருந்தாலும் கிராம் ஒன்றுக்கு ரூ.100* தள்ளுபடி சலுகையையும், மேலும்  கூடுதலாக வைர நகைகளின் மதிப்பில் 20% * தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இச்சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே. இதில், 18 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தில் பல்வேறுவிதமான வடிவமைப்புகள் மற்றும் நுட்பமான கைவினைத்திறனை கொண்டிருக்கும் வகையில் ப்ரத்யேகமாக வளையல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தென்னக பாணியிலான வளையல்கள், ஆன்டிக் வளையல்கள், நிலவு வடிவத்தை அடிப்படையாக கொண்ட மற்றும் மலர்கள், மரபை வெளிப்படுத்தும் கட்டுமான கலைக்கு உதாரணமான மாடங்கள், முத்துகளின் தொகுப்பின் மூலம் அழகியலை வெளிப்படுத்தும் நகைகள், டெக்ஸ்சர்ட் ஷீட்கள், எனாமல் பிரோய் ஆகியவைற்றை கலந்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வேலைப்பாடுகள் உட்பட பல்வேறு விதமான வடிவமைப்புகளின் வளையல் தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக 24 கே எக்ஸ்பிரஸ் எனும் தங்க நாணய ஏடிஎம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளது தனிஷ்க். இது தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி தனிஷ்க் ஷோரூம்கள் மற்றும் tanishq.co.in/akshaya-tritiya எனும் இணையதளத்திலும் கிடைக்கும்.

Related Stories: