கீரனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நூதன முறையில் ரயில் பூச்சொரிதல்

புதுக்கோட்டை: கீரனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அறவழிக்குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நூதன முறையில் ரயில் பூச்சொரிதல் நடத்தி சமபந்தி விருந்து அளித்தனர். இதில் ஏராளமானோர் தீச்சட்டி ஏந்தி, பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து‌ சிலம்பு சுற்றி ஊர்வலமாக சென்றனர்.கடந்த 2020 ஆண்டுக்கு முன்பு வரை அனைத்து ரயில்களும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற நிலையில் கொரோனா கால கட்டத்திற்குப்பின் ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே அங்கு நின்று செல்வதாகவும் சென்னையிலிருந்து அவ்வழித்தடத்தில் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் அங்கு நிற்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதுநாள் வரை அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த அறவழிக்குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கீரனூர் ரயில்வே நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிற்க கோரி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று கீரனூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் கீரனூர் ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். ரயில்கள் நிற்காததால் அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைவதாகவும், எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றியதிலிருந்து தங்கள் பகுதியில் ரயில்கள் நின்று செல்வதில்லை என்றும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அந்த அமைப்பினர் நூதன முறையில் ரயில் பூச்சொரிதல் விழா நடத்தினர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கீரனூர் காந்தி சிலையிலிருந்து கையில் தீச்சட்டி ஏந்தி, பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், பாரம்பரிய முறைப்படி சிலம்பு சுற்றி, ரயில்வே நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அந்த பகுதியில் சமபந்தி விருந்து நடத்தி அனைத்து ரயில்களும் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நூதன முறையில் வலியுறுத்தினர். அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கீரனூர் காந்தி சிலையிலிருந்து கையில் தீச்சட்டி ஏந்தி, பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், பாரம்பரிய முறைப்படி சிலம்பு சுற்றி, ரயில்வே நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.

Related Stories: