சென்னையில் நிசான் நிறுவனம் இயங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

 ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒரகடத்தில் டாட்சன் வகை கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது, மந்தமான கார் விற்பனை காரணமாக, உற்பத்தியை நிறுத்த போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது என செய்திகள் வருகின்றன.

இந்த நிறுவனம் மூடப்படும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அரசுக்கு வரும் வருவாயும் வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஓராண்டில் 2 பெரிய கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன என்பது வேதனையானது. அதே நேரத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். நிறுவனங்கள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

இதில் முதல்வர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: