இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே

டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார்.லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 1982-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை முடித்தவர். ராணுவத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவர் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறை. இவர் இந்திய ராணுவ பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான்-நிகோபார் பிராந்தியத்திலும் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

ஏப்ரல் மாதத்தின் கடைசி தினமான இன்று, மனோஜ் முகுந்த் நரவனே ஓய்வு பெறுவதை ஒட்டி, நாளை புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்று தனது கடமைகளை ஆற்ற உள்ளார். அதற்கேற்ற வகையில் இன்று இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டேவிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஒப்படைத்தார். நாளை முதல் ராணுவத்தில் அனைத்து பொறுப்புகளையும் புதிய தளபதியான மனோஜ்பாண்டே கவனிக்க உள்ளார்.

தற்போது தனது பதவியில் இருந்து ஓய்வு பெரும் நரவனேவை, ஒன்றிய அரசு முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு டிசம்பர் 8ந்தேதி காலை முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி என்ற பெருமையை பெற்ற பிபின் ராவத் மறைவால் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக, ஓய்வு பெறும் ராணுவ தளபதி நரவானே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவ பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான்-நிகோபார் பிராந்தியத்திலும் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, நரவனே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இதனையடுத்து, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார். ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ஒருவர் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான், நிக்கோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: