ஆதனக்கோட்டை பகுதியில் கோடை குறுவை நெல் பயிருக்கு உரமிடும் பணி தீவிரம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கோடை குறுவை நெல் நாற்று நட்ட வயல்வெளிகளில் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் நெல் நாற்று பயிர்களுக்கு இடையே இருந்த புல், பூண்டுகளை பறித்து எடுத்து விட்டு நீர் பாய்ச்சி பொட்டாஷ் உரத்துடன் யூரியா உரம் கலந்து பயிர்களுக்கு வீசி வருகிறார்கள்.

விவசாயிகளிடம் பேசியபோது பயிர் வளர்ந்து வரும் வேளையில் பொட்டாஸ் யூரியா கலந்து பயிர்களுக்கு நன்கு உரமிட்டால் நெல் பயிர் வளர்ச்சி அடைவதுடன் நெல்கதிர்கள் நன்கு மணி சந்துடன் நீளமாக விளையும் என்று கூறினார் .மேலும் நெல் சாகுபடியை பொறுத்தவரை பட்டம் என்பது மாறிவிட்டது என்றும் நீர்நிலைகள் நன்கு இருந்தால் நெல் சாகுபடி எப்போழுது வேண்டுமாலும் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

Related Stories: