பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 141 அடி உயரத்தில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட கிறிஸ்து சிலை

பிரேசிலியா: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உலகிலேயே உயரமான இயேசு கிறிஸ்து பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கர்பூவாடோ மலைத்தொடரில் கடந்த 1932-ம் ஆண்டு பிரம்மாண்ட ரீடிமர் இயேசு நாதர் சிலை திறக்கப்பட்டது. மலை உச்சியில் 120 அடி உயரத்தில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலை உலகத்திலேயே மிக உயர்ந்த இயேசு சிலையாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் தெற்கு பிரேசிலில் உள்ள என்கேந்தடோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலாவை ஈர்க்கும் வகையில் உயரமான கிறிஸ்து சிலை உருவாக்கப்பட்டது. 141 அடி உயரத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலோக கட்டமைப்பின் மீது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலை நகரத்திற்கு மேலே ஒரு மலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் இந்த சிலை உலகின் மிகப்பெரிய கிறிஸ்து சிலையாக இருக்கும் என கிறிஸ்ட் அசோசியேசன் தலைவர் நோபிஷன் ஆன்டனோர் தெரிவித்துள்ளார்.        

Related Stories: