யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

புதுடெல்லி: பாஜ ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்டோர் பலியானது தொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சையானது. இது தொடர்பான புகாரின்பேரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘மாரிதாஸ் டிவிட்டரில் மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி குறித்த கருத்துகளின் போது தமிகத்தில் ஆளும் அரசாக இருக்கும் கட்சியின் பெயரை குறிப்பிட்டு தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தையை பதிவிட்டிருந்தார்.

 மாநிலத்தின் நேர்மை குறித்தே அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால், மாரிதாஸ் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: