கடமலைக்குண்டு மூலவைகை ஆறு தடுப்பணையில் ஆபத்தான முறையில் குளியல் போடும் சிறுவர்கள்-அறிவிப்பு பலகை வைத்து தடுக்க கோரிக்கை

வருசநாடு : கடமலைக்குண்டு வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த வாரம் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர் நீர்வரத்து ஏற்பட்டதன் காரணமாக கடமலைக்குண்டுவில் மூலவைகை ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கும் இந்த தடுப்பணையில் ஆற்றின் தண்ணீர் தேங்கி வழிந்தோடுகிறது.

இந்நிலையில் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அபாயகரமான முறையில் குளித்து வருகின்றனர். தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் சில பகுதிகள் மிக ஆழமானதாக உள்ளது. அந்த பகுதிகளில் சிறுவர்கள் தெர்மாகோல் மற்றும் மரக்கட்டைகளை பயன்படுத்தி ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.

எனவே விபரீதம் நடக்கும் முன்பாக தடுப்பணை பகுதிக்கு யாரும் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: