சீர்காழி அருகே திருநகரி பெருமாள் கோயில் வளாகத்தில் காய்த்து குலுங்கும் பலாப்பழங்கள்

சீர்காழி : சீர்காழி அருகே திருநகரி கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சீசனில் பலாப்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகிறது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் பலாமரம் வளர்ந்துள்ளது. இந்த மரத்தில் வேரிலிருந்து கிளைகள் வரை பலாப்பழங்கள் கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கில் காய்த்து தொங்குகின்றன.

இதனை கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். பலா மரத்தில் காய்த்து தொங்கும் பலா பழங்களை அந்த பகுதியில் வசிக்கும் மயில், அணில் போன்றவைகள் ருசித்து சாப்பிட்டு செல்கின்றன. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பலா மரத்தில் பலாப்பழங்கள் வேரிலிருந்து கிளைகள் வரை காய்த்து பலன் தருவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: