சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!மொத்த பாதிப்பு 171-ஆக அதிகரிப்பு..! புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171-ஆக அதிகரித்துள்ளது. ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், ஏற்கனவே உள்ள கொரோனா வகையால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர், புதிய வகை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

நேற்றுவரை சென்னை ஐஐடியில் 1,676 பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினமும் எடுக்கப்படும் பரிசோதனைகளில், கொரோனா பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் குடைந்து கொண்டே செல்கிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் ஒருநாள் எடுக்கப்படும் பரிசோதனைகளில் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து 1.5 சதவிகிதமகா தற்ப்போது குறைந்த்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இன்றுடன் அனைவருக்குமான கொரோனா பரிசோதனை முடிவடைகிறது. அதன் பின்னர் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. கொரோனா பதித்த அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், நாளை முதல் குணமடைந்து டிஸ்சார்ச் செய்யப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரிக்கம் என அவர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 6,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 2.6 சதவிகிதம் ஆகும். பொது சுகாதார வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையிலேயே வெளிப்படையான பரிசோதனை நடைபெறுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: