தமிழக முதல்வர் தேனி வருகை வைகை அணை விருந்தினர் மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரம்

ஆண்டிபட்டி: தமிழக முதல்வர் தேனி மாவட்டத்திற்கு வருவதையொட்டி வைகை அணை பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை தயாராகி வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்.30ம் தேதி முடிவுற்ற வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சிப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தேனி மாவட்டம் வருகிறார். தேனியில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏப்.29ம் தேதியே தேனிக்கு வரும் முதல்வர் வைகை அணையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து வைகை அணை விருந்தினர் மாளிகையை தயார் செய்யும் பணியில் பொதுப்பணி துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விருந்தினர் மாளிகைக்கு புதிய வண்ணம் பூசுதல், மாளிகையின் உட்புறம் பழைய விளக்குகளை அகற்றி புது மின்விளக்குகள் பொருத்து பணி நடந்து வருகிறது. மேலும் விருந்தினர் மாளிகையை சுற்றிலும் வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடத்தை தயார் செய்து வருகின்றனர். முதல்வர் வருகையை தொடர்ந்து வைகை அணை விருந்தினர் மாளிகை புத்தம் புதுப்ெபாலிவு பெற்று வருகிறது.

Related Stories: