செவிலியர் விடுதிக்கு பூமி பூஜை: நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் ஆரம்ப பொதுசுகாதார நிறுவன வளாகத்தில், அரசு செவிலியர் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் வந்து தங்கி, செவிலியர் பயிற்சி பெறுகின்றனர். இங்கு பயிற்சி பெறும் செவிலியர்கள் தங்க தனியாக புதிய விடுதி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. செவிலியர்கள் தங்க ரூ2.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று, கட்டிட பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, மாவட்ட பிரதிநிதி சுதாகர், கவுன்சிலர்கள் பூவை ஜேம்ஸ், வின்பிரட், நெல்சன், யுவராஜ், ஏஎஸ்ஆர்.சுரேஷ், தங்கம் திருமலை, ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: