தனியார் விடுதியில் அடைத்து பள்ளி மாணவி பலாத்காரம்: காதலன் உள்பட மூவர் போக்சோவில் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு நேற்று 14 வயது சிறுமியை ஒரு வாலிபர், பள்ளி சீருடையில் அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அந்த விடுதிக்கு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு ஒரு அறையில், சிறுமியுடன் வாலிபர் இருந்துள்ளார். அவர்களை மீட்டு, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயசூர்யா (24), அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து, தனியாக பேச வேண்டும் என ஆசைவார்த்தை கூறி, விடுதிக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, ஜெயசூர்யா மீது கடத்தல், அறையில் அடைத்து வைப்பது, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிந்து, கைது செய்தனர். இதற்கு உடந்தைாக இருந்த விடுதி மேலாளர் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் (54), ஊழியர் சிவகங்கையை சேர்ந்த கண்ணன் (52) ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜெயசூர்யா, ஸ்டீபன், கண்ணன் ஆகிய மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: