வனத்துறை சார்பில் பழங்குடியினர் மக்களுக்கு குடிநீர் வசதி

பந்தலூர்:  கேரளா மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. மாவோயிஸ்ட்கள் பழங்குடியினர் மக்களை சந்தித்து அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் தமிழக எல்லைப்பகுதில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் மாவோயிஸ்ட்கள் ஊடுறுவலை தடுப்பதற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முகாம் அமைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகின்றது.

இந்நிலையில் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி முள்ளன்வயல் செவிடன்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில் பிதர்காடு வனச்சரகம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் கிணறு மற்றும் பம்பிங் அறை நீர்தேக்கத்தொட்டி ஆகியவை அமைத்து குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் திட்டத்தை பிதர்காடு வனச்சரகம் வனவர் ஜார்ஜ் பிரவீன்சன், வனக்காப்பாளர் ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: