ரஷ்யா மீதான போரின் காரணமாக 60 பில்லியன் டாலர் உக்ரைனுக்கு இழப்பு: உலக வங்கி தகவல்

வாஷிங்டன்: போரால் உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உலக வங்கித் தலைவர் கூறினார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேலான நிலையில் அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர். ரஷ்யப்படைகள் உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக அழித்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது.

இந்நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் ரூ.4,57,169,13,00,000) இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. போர் மேலும் தொடருமானால் இழப்பு மதிப்பு அதிகரிக்கும். உக்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளை உலகவங்கி செய்யும். குறுகிய கால சேத மதிப்பீட்டின் கீழ் உதவிகள் வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: