சாணார்பட்டி அருகே குளத்தில் மீன்பிடி திருவிழா-மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டி குளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில், பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றனர்.

சாணார்பட்டி  அருகே, மடூர் பஞ்சாயத்தில் புகையிலைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மணியக்காரன்பட்டி எட்டிக்குளம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் தேங்கி மீன்கள் வளர்க்கப்பட்டன. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

முன்னதாக கன்னிமார் சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. புகையிலைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணியக்காரன்பட்டி, மடூர்,  ராஜக்காபட்டி,  சிலுவத்தூர் பகுதி  கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளத்தில் இறங்கி விரால்,   கெண்டை, ரோக், அயிரை மீன், கெண்டை மீன்,  கெளுத்தி மீன் உள்ளிட்ட பல வகையான   மீன்களை அள்ளினர். ஒவோருவரும் 2 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை பிடித்தனர். மத ஒற்றுைமைையை வலியுறுத்தி  நடத்தப்படும் இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்நாட்டாமை சூசைமாணிக்கம் தலைையில் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: