சென்னை : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்னுடைய காரை , எப்போது வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம்..ஆனால் அந்த காரை எடுத்து விட்டு கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்ற எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேச்சால் பேரவையில் சிரிப்பலைகள் எழுந்தது. சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ..,எனக்கு இன்று பேச வாய்ப்பளித்த முதலமைச்சர், துரைமுருகன், மற்றும் கொறடாவுக்கு நன்றி..
மிக முக்கியமாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சித் துணைத் தலைவருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. ஏனென்றால்கடந்த ஆண்டு நான் பேசும் போது எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்து விட்டீர்கள்.நேற்றும் வெளியே சென்று வீட்டீர்கள்.இன்று நான் பேசும் போது உள்ளே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி.
வெளிநடப்பு செய்தாலும் என் காரில் தான் ஏற செல்கிறீகள்...நீங்கள் மட்டும் இல்லை நானும் 3 நாட்கள் முன்பு உங்க காரில் ஏற சென்றேன்.!அடுத்த முறை தாரளமாக என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆனால் அந்தக் காரை எடுத்துவிட்டு கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள்,என பேசியதும் பேரவையில் சிரிப்பு அலை வீசியது.இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் ; எங்கள் கார் எப்போதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என தெரிவித்தார்..