இதேபோல், ஓட்டேரி ஹைதர் கார்டன் மெயின் தெருவில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஓட்டேரி ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார் (22) மற்றும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நாகராஜ் (39) ஆகிய இருவரை ேபாலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வியாசர்பாடி எஸ்.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த பாபு (29) மற்றும் வியாசர்பாடி விஓசி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த அலமேலு (28) என்ற பெண் கஞ்சா வியாபாரி ஓட்டேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி சர்மா நகர் எஸ்டேட் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூர் சீனிவாசா தெரு பகுதியைச் சேர்ந்த தர்ஷன் (23) எஸ்.ஏ.காலனி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரம்பூர் வேக்கின்ஸ் தெரு பகுதியில் பெட்டிக்கடையில் இருந்து மாவா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த கடையில் மாவா மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த வியாசர்பாடி என்எஸ்கே தெருவைச் சேர்ந்த முருகன் (51) என்பவர் திருவிக நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோன்று பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராகுல் (28), தினேஷ் (எ) பூனை (22), யோகேஷ் (21), வைரமுத்து (எ) சக்தி (21) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நேற்று முன்ினம் இரவு ஒரே நாளில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கஞ்சா, குட்காவுக்கு எதிரான வேட்டையில் 18 பேர் கைது: ஒரேநாளில் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.