15வது திமுக உட்கட்சி பொதுத்தேர்தல் வேட்பு மனுக்களை நாளை ஒப்படைக்கவேண்டும்: அமைச்சர் ஆவடி நாசர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட மாநகர, நகர, பேரூர் திமுக நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

நடைபெற உள்ள திமுக 15வது உட்கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பெற்றுச்சென்றவர்கள் ஆவடி, திருமலைராஜபுரம், ஆவடி ரயில் நிலைய அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை (21ம் தேதி) காலை 9 மணியளவில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களான விவசாய தொழிலாளர் அணி செயலாளர் மதிவாணன், தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் ஆகியோரிடம் வேட்புமனு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

எனவே இந்நிகழ்ச்சியில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: