மும்பையில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாநாடு: பாஜக அரசுக்கு எதிராக இணையும் எதிர்கட்சிகள்

மும்பை: பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி முதலமைச்சர்கள் மாநாடு மும்பையில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வென்றெடுக்க, எதிர்கட்சிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் காங்கிரஸ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து பேசிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில் நாட்டின் நிலை குறித்து விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை பேரில், எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் மாநாட்டை மும்பையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதில் வேலையின்மை, பணவீக்கம், வகுப்புவாத பிரிவினையை தூண்டும் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: