சென்னை: நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதைதொடர்ந்து பணியின் போது உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மும்பை துறைமுகத்தில் கடந்த 1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. அதை அணைக்க சென்ற போது கப்பலில் இருந்த 1,200 டன் வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி தீயணைப்போர் தியாதிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.