ஷாங்காயில் கொரோனா பரவுவதால் தூதரகத்தை விட்டு வெளியேறுங்க: ஊழியர்களுக்கு அமெரிக்கா உத்தரவு

வாஷிங்டன்: ஷாங்காயில் கொரோனா வேகமாக பரவுவதால் துணை தூதரகத்தை விட்டு பணியாளர்கள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் ஷாங்காய்  மாகாணத்தில் கடந்த மார்ச் 29ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஷாங்காயில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை அவசரகால சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ஷாங்காயில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் அவசரநிலை அல்லாத பணியாளர்கள் தானாக முன்வந்து துணை தூதரகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது சிறந்தது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஊழியர்கள் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ஷாங்காயின் நிலைமை சற்று மோசமாக உள்ளது. கொரோனா பாசிட்டிவ் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிப்பது சரியாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: