சென்னையில் திருடு போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி:காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் திருடு போன மற்றும் காணாமல் போன 1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது சென்னை பெருநகரில் திருடு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை சர்வதேச அலைப்பேசி அடையாள  குறியீட்டு (IMEI)  எண்களை  பயன்படுத்தி தனிப்படை போலீசார் மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட தொலைபேசியை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.

 இதற்கான சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துக்கொண்டு மீட்கப்பட்ட தொலைபேசிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டார்.

சுமார் 1 கோடி மதிப்பிலான 863 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்ட பின்னர் நிகழ்சசியில் பேசிய அவர் அலைபேசி என்பது தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு  ஒரு உணர்வு பூர்வமான பொருளாக மாறிவிட்டது  என்பதால் அது தொலைந்து போகும் பட்சத்தில்  அது அவர்களை மனதளவில் பாதிக்கும் என்று தெரிவித்தார். திருடு போன அலைபேசி வழக்குகளை பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கவனத்துடன் கையாள வேண்டும் என்று  சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். பொதுமக்களும் தங்களுடைய அலைபேசிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று கூறினார். தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்-க்கு பொதுமக்கள் தனது நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: