ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? ஊரடங்கு மற்றும் தளர்வுகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு ஜூன் 14-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் நீட்டிப்பது, தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறுது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
 இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்பு சற்று அதிகரித்து வருகிறது.

The post ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? ஊரடங்கு மற்றும் தளர்வுகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: