சித்து ராஜினாமா செய்யப்பட்ட நிலையில் பஞ்சாப் காங். புதிய தலைவர் நியமனம்..!

புதுடெல்லி: தேர்தல் தோல்வியை தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராக அமரீந்தர் சிங் பிரார் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அப்போதைய மாநில தலைவர் சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய மாநில தலைவர் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக அமரீந்தர் சிங் பிரார் (ராஜா வாரிங்) நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் சட்டமன்றக் கட்சித் தலைவராக பிரதாப் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பின் காங்கிரஸ் செயல் தலைவராக பாரத் பூஷன் ஆஷுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நியமிக்கப்பட்ட மாநில தலைவர் அமரீந்தர் சிங் பிரார் மற்றும் பிரதாப் சிங் பஜ்வா ஆகிய இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: