அமித்ஷா அறிக்கை குறித்து விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை:   சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை அலுவல் மொழியாக்கப்படும், ஆட்சி மொழியாக ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இதை வன்மையாக கண்டிக்கிறோம். எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கக்கூடாது. ஏற்கனவே இரு மொழிக் கொள்கை இருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துவதற்கும், குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் அமித்ஷா இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். காங்கிரஸ் சார்பாக சட்டப் பேரவையில் விவாதிக்க விதி எண் 55 கீழ் இதை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொடுத்து இருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: