பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட வழக்கில் ஐகோர்ட்டுக்கு மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் எஸ்.வி.சேகர்

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்னதாக பகிர்ந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சை கிளம்பியதை அடுத்து அந்த பதிவுகளை அவர் நீக்கினார்.

அதனையடுத்து, அந்த பதிவு தொடர்பாக சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது காவல்துறை தரப்பில், ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, எஸ்.வி. சேகர் தரப்பில், சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு நீக்கப்பட்டதாகவும், அதற்க்கு மன்னிப்பும் கேட்டதாகவும், வேணுமென்றால் நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: